Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே இதை செய்யுங்க!

நம்மில் பலரும் Google Pay வழியாக கரெண்ட் பில் கட்டுவதையும், மொபைல் ரீசார்ஜ் செய்வதையும், Paytm வழியாக பஸ், சினிமா டிக்கெட்களை புக் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளோம்.

இப்படியாக நாம், பெரும்பாலான விடயங்களை செய்ய ஆன்லைனையே பெரிதும் நம்பி உள்ளோம். அவ்வளவு ஏன்? பேங்க் அக்கவுண்ட் வழியாக நடக்கும் பணப்பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கும் கூட நாம் ஆன்லைனை தான் நம்பி உள்ளோம்.சைலன்ட் ஆக "காணாமல் போகும்" பணம்!
பலவகையான வேலைகளை வீட்டில் அமர்ந்தபடியே செய்து முடிக்க உதவும் Google Pay, Paytm போன்ற யுபிஐ ஆப்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வலைதளங்கள் உட்பட, ஒட்டுமொத்த ஆன்லைன் உலகமுமே - டிஜிட்டல் வழியிலான பண மோசடிகள், போலியான ஆப் மற்றும் வெப்சைட் வழியிலான வங்கி மோசடிகள் என பல வகையான சைபர் குற்றங்களால் நிரம்பி வழிகின்றன என்பதே நிதர்சனம்.

நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து, மொபைல் பேங்கிங் ஆப்பில் இருந்து, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்களில் இருந்து "சைலன்ட் ஆக" பணம் காணாமல் போன சம்பவங்கள் - பணம் திருடப்பட்ட - குற்றங்கள் இங்கே அதிகம்!"அது" நடந்தால்.. உடனே "இதை" செய்யவும்!
ஒருவேளை நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை இழந்த சம்பவம் ஏதேனும் நடந்தால், உடனே இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் போர்ட்டலுக்கு (Cybercrime Portal) சென்று புகார் அளிக்கவும்!
நீங்கள் ஏதேனும் ஒரு சைபர் க்ரைமால் அல்லது ஆன்லைன் மோசடியால் அல்லது டிஜிட்டல் வழியிலான பணம் இழப்பால் பாதிக்கப்பட்டால், இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் போர்ட்டல்-ஐ பயன்படுத்தி உடனடியாக அது தொடர்பான புகாரை அளிக்கலாம்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.