பெண்களுக்கான இலவச கேஸ் இணைப்பு திட்டம் Pradhan Mantri Ujjwala Yojana
*திட்டத்தின் நோக்கம்*
01. தகுதி உள்ள குடும்ப பெண்கள் அனைவருக்கும் இலவச கேஸ்.
02. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது.
*திட்டத்திற்கான தகுதி*
01. இத்திட்டத்தை பெண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
02. பெண்கள் இந்திய குடியுரிமையை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
03. 18 வயது நிரம்பியராக இருக்க வேண்டும்.
04. முன்பு எந்த விதமான கேஸ் இணைப்பும் அவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது.
*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்*
01. சம்பந்தப்பட்ட பெண் பயனாளியின் ஆதார் கார்டு
02. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அனைவரின் ஆதார் கார்டு
03. ரேஷன் கார்டு ( வறுமை கோடு கீழ் )
04. அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
05. ஜாதி சான்றிதழ்
06. முகவரி சான்றிதழ் ( Voter ID / Licence)
07. வங்கி கணக்கு ( Passbook Front Page Xerox )
*திட்டத்திற்கு திட்டம் எடுக்கும் முறை*
உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கேஸ் ஏஜென்சி மூலம் எடுக்கலாம்.
( அல்லது ) www.pmuy.gov.in என்ற என்ற இணையதளத்தில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ( அல்லது )
உங்களது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொண்டால் மானிய கேஸ் அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் இணைப்புகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.