*திட்டத்திற்கான நோக்கம்*
புதிதாக கால்நடை தொழில் முனைவோர்களை உருவாக்கம் செய்வது.
உதாரணமாக மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை அமைக்க.
*திட்டத்திற்கான கல்வி தகுதி*
ரூ. 5,00,000 வரை கடன் பெற எவ்வித கல்வி தகுதியும் தேவை இல்லை.
அதற்கு மேல் கடன் பெற வேண்டுமெனில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*வயது வரம்பு*
18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
*திட்ட மதிப்பீடு*
கால்நடை பண்ணை தொழில்களுக்காக ரூ. 20,00,000 வரை கடன்.
இதில் சொந்த முதலீடாக மொத்த திட்ட மதிப்பீட்டில் 5% சிறப்பு பரிவினர்கள் மற்றும் 10% பொது பிரிவினரும் முதலீடு செய்ய வேண்டும்.
ஒருவேளை மதிப்பு கூட்டபட்ட பண்ணை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.50,00,000/- வரை ( உதாரணமாக நெய், வெண்ணெய், பால் பவுடர் ) வங்கியில் கடனாக பெற்றுக்கொள்ளலாம்.
*மானியத் தொகை விபரம்*
● நகர்ப்புறத்தில் வாழும் பொது பிரிவினருக்கு 15%, சிறப்பு பிரிவினருக்கு 25%.
● கிராமப்புறத்தில் வாழும் பொது பிரிவினருக்கு 25%, சிறப்பு பிரிவினருக்கு 35%.
*திட்டம் பெறும் முறை*:
அவரவர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் முனைவோர் மையத்தில் ( DIC Office ) ( அ ) பொது சேவை மையம் ( அ ) www.kviconline.gov.in/pmegpeportal
*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்*
புகைப்படம், ஆதார், குடும்ப அட்டை, மாற்று சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் உறுதிமொழி பத்திரம், திட்ட அறிக்கை, வாடகை ஒப்பந்த பத்திரம், நில பத்திரம், கட்டிடத்தின் திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம், கூட்டு ஒப்பந்த பத்திரம், VAO சான்றிதழ்.
நன்றி,
மற்றவருக்கும் பகிருங்கள்