கடும் வெயில் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது மிகவும் சிறந்தது.
உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தை போக்கவும் உடல் வெப்பத்தை குறைக்கவும் குளிர்பது பயன் தரும்.
வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
வெயில் காலத்தில் உணவு முறைகள்:
வெயில் காலத்தில் காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையும் செரிமானம் ஆகாத உணவையும் ஒதுக்குவது அவசியம்.
உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், புளிக் குழம்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நீர்க்காய்களான பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவு முறை தவறாக இருந்தால் வயிற்றுப்போக்கு, ஆசனவாய் எரிச்சல், மூலம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
வாழைப்பழம், சீத்தாப்பழம், கொய்யா, திராட்சை, பலா, வெள்ளரி, முலாம் பழம் போன்ற பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்ல முறையில் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
குளிர்சாதன பெட்டியைவிட, மண்பானைகளே ஆரோக்கியமானவை.
குளிர்சாதன பெட்டியில் இருக்கும் நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நம் தட்பவெப்ப நிலைக்கு பொருந்தாத இறுக்கமான ஆடைகளை அணிவது, உடலுக்கு தீங்கானதே. குறிப்பாக வெயில் காலத்தில் இவ்விதமான இறுக்கமான உடைகளால், பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன.
உடலை உறுத்தாத மெல்லிய உடைகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. வெயில் காலத்தில் ஆபரணங்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் தேவைப்படும்போது மட்டும் அணிந்து கொள்ளலாம்.
வெயிலில் தொப்பி அணிந்து செல்லும் பழக்கமுடையவர்கள் தொப்பிக்கு அடியில் ஆவாரை இலைகளை வைத்துக்கொள்ளலாம். ஆவாரை தலைப்பாகையானது, உடலில் உண்டாகும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை கொண்டது. அதிக வெப்பத்தால் உண்டாகும் தலைவலியையும் இவை தடுக்கும்.
இது போன்ற தகவல்களுக்கு நமது வலைப்பதிவு பின்பற்றவும்