மயக்கம் வருவது போல் உணர்கிறீர்களா? உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவை!
உங்களுக்கு மயக்கம் வருவது போல் இருந்தால், சில முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதைத் தடுக்கலாம்.
மயக்கம் வரும்போது உடனடியாக உட்காரவோ அல்லது படுக்கவோ வேண்டும்.
சுற்றி ஏதேனும் கூர்மையான பொருட்கள் மற்றும் ஆபத்தான இடங்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.
நல்ல காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்.
கால்களை சற்று உயர்த்திய நிலையில் படுத்துக் கொள்ளுங்கள். இதனால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகும்.
இறுக்கமான ஆடைகளைத் தளர்த்த வேண்டும்.
குளிர்ந்த காற்று அல்லது விசிறியின் உதவியுடன் உடல் வெப்பநிலையை குறைக்கலாம்.
குளிர்ந்த நீரில் நனைத்த துணியை நெற்றியில் வைக்கலாம்.
நீரிழப்பு காரணமாக மயக்கம் ஏற்பட்டால் சர்க்கரை கலந்த நீர் அல்லது எலுமிச்சை சாறு அருந்தலாம்.
மருத்துவ உதவி எப்போது தேவை?
• மயக்கம் அடிக்கடி ஏற்பட்டால்.
• மயக்கத்துடன் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் அல்லது தலைவலி இருந்தால்.
• மயக்கம் நீண்ட நேரம் நீடித்தால்.
• மயக்கத்தின் போது காயங்கள் ஏற்பட்டால்.
• நீரிழிவு, இதய நோய் அல்லது பிற நாள்பட்ட நோய்கள் இருந்தால்.