வெற்றியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து குணநலன்கள் இது தெரிந்தால் நீங்க ராஜா


இன்னைக்கு சுந்தர் பிச்சை பற்றி தெரியாதவர்களே இல்லை சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கூகுளின் தலைமை நிர்வாகி உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் சிஇஓ களில் ஒருவர் தான் சுந்தர் பிச்சை

வெற்றிக்கனி என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கும் கனி கிடையாது அந்த வெற்றியை அடைவதற்கு ஒருவரிடம் பல தகுதிகள் இருக்கவேண்டும் பல ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும் 

 சுந்தர்பச்சை கூறும் வெற்றியாளர்களிடம் இருக்க வேண்டிய 5 பழக்கவழக்கங்கள்


1. தன்னைத் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே இருத்தல்

    
வெற்றியாளர்கள் எப்போதும் அறிவையும் திறனையும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் தன்னிடம் இருப்பது போதுமானது என்று சிறிய வட்டத்துக்குள் இல்லாமல் தொடர்ந்து புதிய இலக்குகளை நிர்ணயித்து அதற்காகப் போராடிக் கொண்டிருப்பார்கள் புதுப்புது அனுபவங்களை சேகரித்துக் கொண்டே இருப்பார்கள்

2. வரும் பிரச்சனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள்


சாதனையாளர்கள் ஒருபோதும் பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்க மாட்டார்கள் அந்த வகையில் வந்த பிரச்சினைகளை தங்களுக்கு புதிய பாடமாக கற்றுக் கொடுக்கும் பாடம் கற்றுக் கொடுக்கும் என நம்புவார்கள் அந்த மாதிரியான பிரச்சனை இது கொண்டு தன்னால் முடிந்தவரை அதற்காக போராடுவார்கள் ஒருபோதும் மனம் தளராமல் முயற்சி செய்து கண்டே இருப்பார்கள் முடிவில் அந்த பிரச்சினைக்கான தீர்வு காண்பார்கள்

3. புதுமையான யோசனைகளோடு முக்கியத்துவம் கொடுப்பார்கள்


ஒவ்வொரு வெற்றியாளர் எப்போதும் விரும்பக் கூடிய ஒரு விஷயம் புதுமை நாம் செய்யும் காரியத்தில் எவ்வாறு புதுமையை புகுத்த லாம் என்று ஒரு எப்போதும் எண்ணிக் கொண்டே இருப்பார்கள் மற்றவர்களிடமிருந்து தங்களுடைய முயற்சிகள் தனித்துவம் படைத்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உழைத்துக்கொண்டே இருப்பார்கள்

4. தோல்வியை எண்ணி பயம் கொள்ள மாட்டார்கள்


வெற்றியானாலும் சரி தோல்வியானாலும் சரி அனைத்தும் நன்மைக்கே என்பது வெற்றியாளர்களின் தாரக மந்திரம்  அதனால் அவர்கள் தோல்வியை எண்ணி என்றும் பயந்ததில்லை தங்கள் எடுத்த முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதும் இல்லை சில சமயம் தோல்வி அடைந்தால் கூட அந்த தோல்வியில் இருந்து நாம் எந்தப் பாடம் கற்றுக் கொண்டோம் என சிந்திப்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.
 அப்படி கற்றுக்கொண்டதை வைத்து மீண்டும் முயற்சிப்பார்கள்

5. வெற்றியாளர்கள் எப்போதும் தங்கள் மனதை பின்பற்றுவாரகள்

தனக்குப் பிடித்த காரியத்தை செய்வதும் தனது மனம் கூறும் பாதையில் பயணிப்பது மே வெற்றியாளர்களுக்காண வழி என்பது வெற்றியாளர்கள் நன்கு அறிவார்கள் 
தனது கனவுகளை ஒரு மூலையில் தள்ளிவிட்டு கிடைத்த வாழ்க்கையை சகித்துக்கொண்டு வாழ மாட்டார்கள்
 அப்படிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கு நிம்மதி ஒருபோதும் தராது  அதனால் தான்  தன் மனம்  திருப்திப் படும்படியான செயல்கள தான் செய்வார்கள்

தனது உள்ளுணர்வு காட்டு வழியிலே பயணிப்பார்கள் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் 

நண்பர்களே இதில் எத்தனை பண்புகள் நம்மகிட்ட இருக்கு

 நீங்களே உங்களை கேட்டுக்கோங்க இதில் எந்தப் பண்பு இல்லை என்று தெரிகிறதோ அதை உடனே செயல்படுத்துங்கள் நிச்சயம் நீங்கள் நீ விரும்பிய இலக்கை அடைவீர்கள் 

 இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிரவும் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.