இப்படிப்பட்ட சில சாக்குப்போக்கு கெட்டிக்காரத்தனமாக தெரியும் ஆனால் இதெல்லாம் பணத்துக்கு ஈடாகுமா
இந்த உலகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டது ஒரே ஒரு விஷயத்தைத் தான் நீங்கள் வெற்றி அடைந்தவரா என்பதே
நண்பர்களே உங்கள் சாக்குப் போக்குகளையும் உங்களை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள் இதில் உள்ள சாக்குப் போக்குகள் எத்தனை நீங்கள் சொல்வதைப் போலவே இருக்கின்றன என்பதை கவனியுங்கள்
1. எனக்கு மனைவி குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால் ....
2. எனக்கு போதுமான அளவுக்கு தம் இருந்திருந்தால் ..
3. என்னிடம் பணம் இருந்திருந்தால்..
4. எனக்கு நல்ல படிப்பு இருந்திருந்தால்..
5. எனக்கு ஒரு வேலை கிடைத்திருந்தால் வேலை கிடைத்திருந்தால்..
6. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால்..
7. எனக்கு நேரம் மட்டும் இருந்திருந்தால்..
8. எனக்கு நல்ல நேரம் வைத்திருந்தால்..
9. மற்றவர்கள் என்னை புரிந்து கொண்டிருந்தால் .....
10. என்னை சுற்றி இருந்த சூழ்நிலைகள் வித்தியாசமானவை அமைந்திருந்தால்..
11. மறுபடியும் என்னுடைய வாழ்க்கை வாழ முடிந்திருந்தால்..
12. அவர்கள் என்ன சொல்வார்களோ இவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயப்படாமல் இருந்திருந்தால்..
13. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தால்..
14. இப்போது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால்..
15. மற்றவர்கள் மட்டும் என்னை பொறுத்துக் கொண்டிருந்தால் ..
16. எதுவுமே என்னை தடுக்காமல் இருந்திருந்தால்..
17. நான் இளமையாக இருந்திருந்தால்..
18. நான் விரும்பியது என்னால் செய்ய முடிந்திருந்தால்..
19. நான் பணக்காரனாக பிறந்திருந்தால்.......
20. சரியான நபர்களை நான் சந்திக்க முடிந்திருந்தால்........
21. சிலரிடம் இருக்கும் அதே திறமை எனக்கு இருந்திருந்தால்..
22. எனது எண்ணத்தில் உறுதியாக நிற்கும் துணிவு இருந்திருந்தால்..
23. இழந்துவிட்ட வாய்ப்புகள் மறுபடியும் எனக்கு கிடைத்திருந்தால்..
24. மற்றவர்கள் மட்டும் என்னை எரிச்சல் படுத்தாமல் இருந்திருந்தால்..
25. குடும்பம் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு இல்லாமல் இருந்திருந்தால் ..
26. கொஞ்சம் பணம் என்னால் சேமிக்க முடிந்திருந்தால்..
27. என்னுடைய பாஸ் மட்டும் என்னைப் பாராட்டி இருப்பரேயானால்.........
28. சிலர் மட்டும் எனக்கு உதவி இருந்தால் ..
29. எனது குடும்பம் என்னை புரிந்து கொண்டிருந்தால் ..
30. பெரிய நகரத்தில் நான் வசித்து இருந்தால் ..
31. இப்போது மட்டும் என்னால் தொடங்க முடிந்திருந்தால்..
32. நான் ஃப்ரீயாக இருந்திருந்தால்..
33. சிலரைப் போல எனக்கு பர்சனாலிட்டி இருந்திருந்தால்..
34. நான் இவ்வளவு குண்டாக இல்லாமல் இருந்திருந்தால்..
35. எனது திறமைகளை மற்றவர்கள் தெரிந்திருந்தால்..
36. எனக்கு ஒரு பிரேக் கிடைத்திருக்குமேயானால் ..
37. எனது கடன் சுமையிலிருந்து என்னால் மீற முடிந்திருக்குமேயானால்
38. நான் தோல்வி அடையாமல் இருந்திருந்தால்..
39. அதை எப்படி செய்வது என்பது எனக்குத் தெரிந்திருந்தால்..
40. எல்லோரும் என்னை எதிர்க்காமல் இருந்திருந்தால்..
41. கவலைகள் என்னை வாட்டமல் இருந்திருந்தால்..
42. சரியான நபரை நான் கல்யாணம் செய்ய முடிந்திருந்தால்..
43. மற்றவர்கள் மட்டும் இந்த அளவுக்கு மடையர்களாக இல்லாமல் இருந்திருந்தால்..
44. எனது குடும்பம் ஊதாரித்தனமாக ஆட்டம் போடாமல் இருந்திருந்தால்..
45. என்னைப் பற்றி எனக்கு திட்டவட்டமாக தெரிந்திருந்தால்..
46. நான் நானாக இல்லாமல் இருந்திருந்தால்..
47. கோளாறான நட்சத்திரத்தில் நான் பிறக்காமல் இருந்திருந்தால்..
48. என்ன விதித்து இருக்கிறதோ அதுதான் நடக்கும் என்பது உண்மையாக இல்லாமல் இருக்குமேய்யானல் ..
49. நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய நிலை இல்லாமல் இருந்திருந்தால்..
50. நான் வேறு ஏரியாவில் வசித்து இருந்தால் ...
51. எனது பணத்தை நான் பறி கொடுக்காமல் இருந்திருந்தால்..
52. என்னுடைய கடந்த காலம் மட்டும் இவ்வளவு கசப்பானதாக இல்லாமல் இருந்திருந்தால்..
53. சொந்தமாக எனக்கு ஒரு பிசினஸ் இருந்திருந்தால் ..
54. அவர்கள் நான் சொல்வதை கவனித்து இருப்பார்களேயானால்..
55. நிஜத்தில் நான் எப்படிப்பட்டவன் அப்படியே என்னை பார்க்கும் துணிச்சல் எனக்கு இருந்திருந்தால்...
( இந்த பட்டியலில் முக்கிய மிகவும் முக்கியமானது இதுதான்)
நண்பர்களே இந்த சகக்கு போக்குகள் நிறய நான் மற்ற வர்களிடம் கூறி இருக்கிறேன் இதில் நீங்கள் எந்த பாயிண்ட் கூறியுள்ளீர் என கூறவும்