ஆலோவேராவில் இத்தனை குணாதிசயங்களா ?

 அழிவில்லாத ஒரு செடி” என்று இதனைக் கூறலாம். பல நூற்றாண்டுகளாக அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சையில் கற்றாழை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழற்சி, தொற்று பாதிப்பு, எரிச்சல், தீக்காயம், செரிமான பிரச்சனை, அஜீரணம், வீக்கம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது

தோலுக்கு கிடைக்கும் நன்மைகள் (Aloe Vera Benefits for Skin)

வயதான தோற்றத்தை கற்றாழை மூலம் எப்படி தடுக்கலாம்?

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை பங்கு வகிக்கிறது. வயதான தோற்றத்தை தடுக்க கற்றாழையை கொண்டு தோலை பாதுகாக்கும் கீரிம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.


உடலுக்கு ஏற்படும் நன்மைகள் (Benefits of Aloe Vera for Health)

தழற்சி நீக்கும் கற்றாழை

கற்றாழை சாறினை பருகுவதன் மூலம் உடலில் ஏற்படும் தழற்சி நீங்குகிறது.

கற்றாழை சாறு தயாரிக்க தேவையானப் பொருட்கள்

ஒரு கற்றாழை தண்டு, ஒரு டம்பள் தண்ணீர், ஒரு தேக்கரண்டி தேன்

எவ்வாறு பயன்படுத்துவது

கற்றாழையின் மேல் தோலினை நீக்கி உள்ளே உள்ள கண்ணாடி போன்ற ஜெல்லினை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின், அதில் தண்ணீர் மற்றும் தேனைக் கலந்து மீண்டும் அரைத்து கலவையாக்கி கொள்ள வேண்டும்.

விளைவுகள்

குறிப்பாக இந்த கற்றாழை ஜெல்லினை இரைப்பை தொடர்பான அலர்ஜி பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி நீங்க

இந்த கற்றாழை சாறானது நெஞ்செரிச்சல், அசிடிட்டி, நெஞ்சு வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை

கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பற்பசையானது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இந்த பற்பசையின் மூலம் பல் துலக்கினால் பற்கள் வலுப்பெறும். ஈறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும், வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம். இந்த பற்பசையினை வீட்டிலேயே தயா

தேவையான பொருட்கள்
  • 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
  • 5 தேக்கரண்டி சமையல் சோடா உப்பு
  • 5 தேக்கரண்டி வெஜிடபில் கிளசரின்
  • புதினா
  • யூக்கலிப்டஸ் எண்ணை
  • கண்ணாடிப் பாத்திரம்
செய்முறை

முதலில் கற்றாழை ஜெல்லினை சமையல் சோடா உப்புடன் நன்றாக சேர்க்க வேண்டும். பின், கிளசரின் மற்றும் புதினா சேர்த்து கண்ணாடிப் பாத்திரத்தில் நன்றாகக் கலக்கவும். பிறகு அதனுடன் யூக்கலிப்டஸ் எண்ணை சேர்த்து கலக்கியப்பின் சிறிது நேரத்தில் உங்களுடைய ஆரோக்கியமான பற்பசை தயாராகி விடும்.

பயன்படுத்தும் முறை

கற்றாழையின் ஜெல்லில் உள்ள கிருமிநாசினியானது பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கிறது. இந்த கற்றாழை பற்பசையினை பயன்படுத்துவதன் மூலம் ஈறு வீக்கம், பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை

கற்றாழையானது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்கிறது. மேலும், இரத்த அணுக்களில் புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும், கற்றாழையிலிருந்து கிடைக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் சைட்டோகின்கள் மூலம் உங்களது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்க செய்கிறதுs

புற்றுநோயைத் தடுக்கும் கற்றாழை

கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மைகளையும் கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது நேரடியாக புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.

விளைவுகள்

இரைப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கற்றாழை ஜெல்லினைத் தவிர்க்க வேண்டும்.

மூலப்பிரச்சனையை தடுக்கும் கற்றாழை

மூலப் பிரச்சனைகளுக்கு கற்றாழை அருமருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு கற்றாழையில் உள்ள குறிப்பிட்ட அமிலத் தன்மையானது சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படு

எவ்வாறு பயன்படுத்துவது

மலச்சிக்கலினால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கற்றாழை ஜெல்லினை ஆசனவாயிலில் ஏற்படும் கொப்புளங்களில் தடவுவதன் மூலம் மூலப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இதுபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தி வந்தால் பிரச்சனைகளில் இருந்து வெகுவாக விடுபடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள், மற்றும் நீரழிவு நோயாளிகள் மருந்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம்.


கற்றாழையினை தேர்வு மற்றும் பராமரிக்கும் முறை (How To Select And Store Aloe Vera)

கற்றாழைச் செடியானது வறண்ட நிலத்திலும் வளரும் தன்மைக் கொண்டுள்ளது. கற்றாழைச் செடியில் உள்ள ஓர் இலையினை மட்டும் வெட்டி வைப்பதன் மூலம் அதில் இருந்து மஞ்சள் நிற அமிலம் வெளியேறும். அதனை முழுவதுமாக நீக்கியப் பின்பு நீரில் நன்றாகக் கழுவி பின் உலர வைக்க வேண்டும். பின், மேலே உள்ள பச்சை நிறத் தோலினை மட்டும் நீக்கி உள்ளே உள்ள கண்ணாடிப் போன்ற ஜெல்லினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கத்தி அல்லது தேக்கரண்டி மூலம் எளிதில் எடுத்துக் கொள்ளலாம். அந்த கற்றாழை ஜெல்லினை பிரிட்ஜ்ஜில் வைத்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லினை மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.