உணவுக் கலப்படம் என்பது ஒரு பொருளில் அதே போன்ற பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பது ஆகும்.
கலப்படம் பொருள்களின் தரத்தைக் குறைப்பது நுகர்வோருக்கு உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கலப்படத்தால் ஏற்படும் தீமைகள்
1) உணவுப் பொருட்களுடன் கலக்கப்படும் கல், மண் முதலியன குடல் பகுதியை அடைத்து வலி மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
2) உணவுப் பொருட்களுடன் சேர்க்கக்கூடாத வண்ணம் மற்றும் சுவைக்கரிய பொருட்களைச் சேகரிப்பதால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
3) சமையல் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தினால் வாயுத்தொல்லை கமலை மற்றும் ஈரல் நோய்கள் ஏற்படுகின்றன.
4) கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களால் கண் பார்வை மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
கலப்படம் இல்லாத சமயல் பொருட்கள்
உணவுப் பொருட்களுடன் கலப்படம் செய்யப்படும் பொருட்கள்
1) அரிசி - கல், சலவைக் கற்கள், மண் உருண்டைகள்
2) உளுந்து - கல், மண், தவிடு
3) டீத்தூள் - புளியங்கொட்டைத்தூள், பழைய டீத்தூள்
4) தேன் - வெல்லப்பாகு. சர்க்கரைபாகு
5) நெய் - வனஸ்பதி, மிருகக்கொழுப்பு
6) மசாலா பொருட்கள் - களிமண் உருண்டைகள், செங்கல் பொடி, பயன்படுத்தப்படாத வண்ணங்கள்
7) துவரை - கேசரி பருப்பு 8) மஞ்சள் - ஈய அசிடேட்
9) மிளகு - பப்பாளி விதை 10) கடுகு - அர்ஜிமோன் விதைகள்
இது போன்று மேலும் பல பொருட்களிலும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
கலப்பட தடைச்சட்டம்
இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமலாக்கப்பட்டது. இதனுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்விற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்கு தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50ஐ திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரை ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும்.