மின்சார கணக்கீடு- ஆதார் இணைப்பது எப்படி?
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிநது. இந்தநிலையில் தமிழக அரசு அண்மையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கியது. மின்சாரம் முறைகேட்டை தடுக்க மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் பெற ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. கடந்த அக்டோபர் 6-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஆணையில், மானியத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அந்தவகையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் எம்.டி ராஜேஷ் லகோனி கூறுகையில், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கலாம்.