பிரதமரின் குறு நிறுவனங்களுக்கான உணவு பதப்படுத்துதல் திட்டம்

 பிரதமரின் குறு நிறுவனங்களுக்கான  உணவு பதப்படுத்துதல்  திட்டம்
Pradhan Mantri Formalisation of Micro food processing Enterprises (PMFME) _ June 2020

*பயனாளிகள்*
சிறு குறு உணவு பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்களுக்கானது.

*திட்டத்தின் நோக்கம்*
அமைப்புசாரா உணவு பதப்படுத்துதல் துறையில் உள்ள, குறு நிறுவனங்களின்  சந்தை போட்டித் தன்மையை மேம்படுத்துவதும், துறையின் முறைப்படுத்தலை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.



 
ஏற்கனவே இயங்கிவரும் தொழில் நிறுவனத்திற்க்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை வழங்குதல் மற்றும் நிதி உதவி அளித்தல் ஆகியன.

*திட்டத்தின் சிறப்பசம்ங்கள்*
● மாநிலங்கள் பரிந்துரைத்த 137 பிரத்யேகப் பொருட்கள் இந்த திட்டத்தின் கீழ் வரும்.
 
● இத்திட்டத்தின் தொடர்பு வங்கியாக யூனியன் வங்கி இருக்கும், மேலும் 11 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
 
● 17 மாநிலங்களில் 54 பொது வழிகாட்டுதல் மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

*திட்ட காலம்*:
இந்த திட்டம் 2020-2021 முதல் 2024-2025 வரையிலான 5 ஆண்டுகளுக்கு மட்டும்.

● 18 வயது நிரம்பிய அனைவரும் தகுதியான பயனாளிகள்.

● ODOP – ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் திட்டத்தில் அடங்கும் அனைத்து வகை பொருட்கள் மற்றும் அறுவடைக்குப்பிந்தைய மதிப்பு கூட்டுதல் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

● 5 வருட காலத்திற்கு 10,000 கோடிக்கும் அதிகமான
மதிப்பீட்டில் 2,00,000 குறு உணவு பதப்படுத்துதல்
நிறுவனங்களுக்கு நேரடி உதவி வழங்குதல்.

*மானிய விவரம்*:
கடன் சார்ந்த மூலதன மானியமாக திட்ட மதிப்பில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை ( தனி நிறுவனம் / சுய உதவிக்குழுக்கள் / உழவர் கூட்டமைப்பு )

● சுய உதவிக் குழுக்களுக்கு ஆரம்ப கட்ட முயற்சிக்காகவும் திட்ட அறிக்கை தயார் செய்யவும் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.
 
*பயிற்சிகள் நடைபெறும் இடங்கள்*
NIFTEM – தஞ்சாவூர்   (IIFPT )
RSETI – மாவட்ட அளவில்

மேலும் தொடர்புக்கு:
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை
Directorate of Agriculture Marketing and Agri Business

இணைய தொடர்புக்கு:
www.pmfme.mofpi.gov.in

இதுவரை பயன் அடைந்தவர்கள்:
47,177 திட்ட அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.