விவசாயிகளுக்கான சூரியக் கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம்*
*திட்டத்தின் நோக்கம்*
● சூரிய கூடார உலர்த்தி
விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை அப்படியே விற்பதைக் காட்டிலும், அதன் மதிப்பைக் கூட்டி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
● விவசாயிகள் அறுவடை செய்த பொருட்களை மண் தரையிலோ, சாலையிலோ காய வைத்தால் பொருளின் நிறம் மங்குகிறது, கல், மண் போன்றவையும் கலந்து தரம் குறையும்.
● இதனைக் கருத்தில் கொண்டும், சூரியசக்தி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும் வேளாண் பொறியியல் துறை மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சூரிய கூடார உலர்த்தி அமைக்க அரசு 40% முதல் 60% சதவீதம் மானியம் வழங்குகிறது.
*சூரிய கூடார உலர்த்தி அமைக்க மானியம் விவரம்*
· ஒரு சூரிய கூடார உலர்த்தி, 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி அமைக்கலாம் இதற்கு 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவாகிறது.
· சூரிய கூடார உலர்த்தி அமைக்கச் செலவாகும் தொகையில் 60% சதவீத தொகை சிறு, குறு ஆதிதிராவிடர் பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
· இதர விவசாயிகளுக்கு 40% ( அ ) 50% சதவீத தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
· அதிகபட்சமாக ரூ.3,50,000 வரை லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
· சூரிய கூடார உலர்த்திகள் மூலம் விவசாயிகள் தங்களின் வேளாண் விளை பொருட்களான நிலக்கடலை, கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, மிளகாய், வாழைப்பழம், மக்காச்சோளம், மல்லி, முந்திரி, கீரை வகைகள் போன்றவற்றை உலர்த்தலாம்.
*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்*
○ நில வரைபடம்
○ அடங்கல்
○ சிட்டா
○ ஆதார் அட்டை
○ புகைப்படம் இரண்டு
○ ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு
○ சூரிய கூடாரம் மதிப்பு சான்று ( விலைப்புள்ளி ) ( Quotation )
○ ஜாதி சான்றிதழ்
○ வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்
○ சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்
*திட்டம் பெறுவதற்கான முறை*
தகுதியுள்ள விவசாயிகள், தங்கள் சுய விவரம் அடங்கிய எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தை, முகவரியுடன் மற்றும் இதர ஆவணங்களை இணைத்து, அவரவர் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாண்மை செயற்பொறியாளர் ( அல்லது ) உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறைக்கு நேரில் சென்று விண்ணப்பமாக சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளின் தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவார்.
நன்றி
மற்றவர்களுக்கும் பகிருங்கள்