👉கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக மனிதநேய வார விழாவானது திங்கள் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் திரு சக்திவேல் மாவட்ட வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக்குழு உறுப்பினர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக குளச்சல் உட்கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் தங்கராமன், இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வேல் குமார், திருவருட்பேரவை மாவட்ட செயலாளர் டாக்டர் ஜேம்ஸ் ஆர் டேனியல், பேராசிரியர் அப்துல் அசிம், பேராசிரியை டாக்டர் கே எல் எஸ் கீதா ஆகியோர் மனிதநேய மற்றும் மத நல்லிணக்கத்தை பற்றி மிகச் சிறப்பாக பேசினார்கள்.
வாழ்த்துரை வழங்கிய லயன் ஜெயாகர் பட்டய தலைவர்
மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக தலைவர் P L லாரன்ஸ், வென்சிலாஸ் உரிமையாளர் குவைத் ஆட்டோ ஸ்பா ராபின்சன் ஞானசீகாமணி உதவி ஆய்வாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்