பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகும் வேளையில், ஐஎம்பிஎஸ் (IMPS) பணப்பரிமாற்றம், எஸ்பிஐ வீட்டுக்கடன், பாஸ்டேக் கேஒய்சி (FASTags KYC), என்பிஎஸ் பெறுதல் (NPS Withdrawal) போன்றவற்றில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.
ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற விதிகள் (IMPS Transfer Rules):
ஐஎம்பிஎஸ் மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்கு பணம் அனுப்பும்போது, பணம் பெறுவோரின் வங்கி கணக்கு மற்றும் ஐஎப்எஸ்சி நம்பர் அல்லது மொபைல் நம்பர் மற்றும் எம்எம்ஐடி நம்பர் மட்டுமே இருந்தால் போதுமாக இருந்தது.
ஆனால், ஒரே மொபைல் நம்பரை வைத்து பல்வேறு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்படுவதால், புதிய விதிகளை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு இடையே ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக பணம் அனுப்பினால், பழைய முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது குறிப்பிட தக்கது.
அதுவே, வங்கிக் கணக்குகளுக்கு இடையே ரூ.5 லட்சத்துக்கும் அதிமாக பணப்பரிமாற்றம் செய்தால்,பெறுநரின் மொபைல் நம்பர் மற்றும் வங்கியின் பெயர் ஆகியவற்றை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பரிமாற்ற விதிகளானது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளிலும் பின்பற்றப்பட இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
பாஸ்டேக் கேஒய்சி விதிகள் (FASTags KYC Rules):
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட் கட்டணங்களுக்காக பாஸ்டேக் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கார்டுகளில் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதோடு ஜனவரி 31ஆம் தேதி வரையில் கால அவகாசமும் வழங்கியது.
அதுமட்டுமல்லாமல், இந்த அவகாசம் முடிந்தால், கேஒய்சி அப்டேட் செய்யப்படாத கார்டுகள் அந்தந்த வங்கிகால் டிஆக்டிவேட் செய்யப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்படி நாளை முதல் பாஸ்டேக் கார்டுகள் டிஆக்டிவேட் செய்யப்பட இருக்கிறது. இதை தவிர்க்க கேஒய்சி அப்டேட் செய்துவிடுங்கள்.
எஸ்பிஐ வீட்டுக் கடன் ரூல்ஸ் (SBI Home Loan Rules):
எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் சலுகைகள் மீதான விதிகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு மாற்றப்படுகிறது. ஆக்சுவல் கார்டு ரேட் (Actual Card Rate) விகிதத்தை விட 65bps வரையில் குறைவாக கடன் சலுகைகளை பெற்று கொள்ளாம். இந்த சலுகையானது, ஃப்ளெக்ஸிபே (Flexipay), என்ஆர்ஐ (NRI), சம்பளம் இல்லாதவர்கள் மற்றும் அபோன் கர் (Apon Ghar ) ஆகிய கஸ்டமர்களுக்கு பொருந்தும். இருப்பினும், இந்த வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கஸ்டமர்களின் சிபில் (CIBIL) ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
என்பிஎஸ் பெறுதல் ரூல்ஸ் (NPS Withdrawal Rule):
தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) பென்ஷன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புதிய விதியை வரும் பிப்பரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறது.
மொத்த டெபாசிட் தொகையில் இருந்து 25 சதவீதத்திற்கு மேல் பணத்தை எடுக்க முடியாது. முன்னதாக உயர் கல்வி, திருமணம், குடியிருப்பு வீடு வாங்குதல் மற்றும் மருத்துவச் செலவுகள் போன்ற நோக்கங்களுக்காக பகுதியளவு டெபாசிட்டை திரும்பப் பெறலாம் என்று பிஎப்ஆர்டிஏ குறிப்பிடப்பட்டது.