அயோத்தி ராமர் கோயில் சிறப்பு தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோவிலில் கட்டி முடிக்கபட்டுள்ளது
ராமர் கோவிலின் சிறப்பு அம்சங்கள்

ராமர் கோவிலின் பரப்பளவு 57400 சதுர அடி

மத்திய பிரதேசத்தின் புகழ்பெற்ற கந்தாரிய மகாதேவ் மற்றும் ஒடிசாவின் கோனார் கோயில்கள் ஆகியவற்றை பின்பற்றியே இந்த ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வட மாநிலங்களுக்கே உரிய நாகரா பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
ராமர் கோயில் மூன்று அடுக்குகள் கொண்டுள்ளது.
3அடுக்குகளில் 366அறைகளை கொண்டுள்ளது.
தரை தளத்தில் 160அறைகளும்
முதல் தளத்தில் 132 அறைகளும்
இரண்டாவது தளத்தில் 74 அறைகளும் மொத்தம் 366 அறைகள்
12 நுழைவு வாயில் உள்ளன.

இந்த கோயிலில் ராமனின் வாழ்க்கை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்து வேதங்களை கூறப்பட்டுள்ள வாஸ்து மற்றும் சில்பா சாஸ்திரத்தின் படி
 235 அடி அகலம்
360 அடி அகலம்
161அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இதன் கருவறை எண் கோண வடிவத்தில் உள்ளதாகும்.கர்ப கிரகத்தில் உள்ள ராமர் சிலையின் மீது சூரிய கதிர்கள் விழும் படியாக அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பகிரகத்தில் 5 அடி வெள்ளைப்பளிங்குகல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

 மூலவர் ராமரின் சிலை
ராமர் கோயிலுக்கான மணி 2100 கிலோ எடையுள்ளது இது எட்டா என்னும் இடத்தில் இருந்து பிரத்தேகமாக தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை சார்பில் 2000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
ராமர் கோவில் என்ற போதும் சிவனின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும்18 சிலைகளும் திருமாலின் பத்து அவதாரங்களும் 64 சௌசத் யோகினிகள் சரஸ்வதி தேவியின் 12 வடிவங்கள் என பல்வேறு கடவுள்களின் சிலைகளும் உள்ளடங்கியுள்ளது.
கோயிலின் முன்புறம் மிக மிகவும் பிரமாண்டமான முறையில் அனுமன் சிலை உள்ளது.

 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.