பெற்றோரின் சவால்:
கல்லூரிக் கட்டணத்தைச் சமாளிப்பது எப்படி?
ஆயிரக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் கல்விக் கட்டணம் செலுத்துவது இன்றைய காலத்தில் பெற்றோருக்கு மிக பெரும் சவாலாக உள்ளது. கல்விக் கடன், தங்க நகை அடமானம் போன்ற வழிகளில் கட்டணம் செலுத்தினாலும், அவை மிக பெரும் சுமையாகவே இருக்கும்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் கல்விக்காக சேமிப்பது மிகவும் முக்கியம் . நல்ல விதமான திட்டமிடலுடன் முதலீடு செய்தால், கல்விக் கட்டணத்தை எளிதாக சம்மாளிக்கலாம் .
சில முக்கிய குறிப்புகள்:
நமது பிள்ளைகள் பள்ளியில் படிக்கும்போதே அவர்களின் உயர்கல்விக்காகச் சேமிக்கத் தொடங்க வேண்டும் .
முதலில் இலக்கு தொகை மற்றும் முதலீட்டு காலத்தை முடிவு செய்யுங்கள்.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யவும்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், மல்டி அசெட் ஃபண்ட் போன்றவை .
SIP முறையில் சரியாக முதலீடு செய்யுங்கள்.
உங்கள் முதலீட்டை தவறாமல் கண்காணித்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யுங்கள்.
உதாரணமாக, இன்றைய பட்டப்படிப்புக்கு ரூ.5 லட்சம் செலவாகும் என்றால், இன்னும் 15 வருடங்கள் கழித்து, பணவீக்கத்தால் உங்கள் பிள்ளையின் பட்டப்படிப்புக்கு ரூ.21 லட்சம் செலவாகும். எனவே ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும்.