கொய்யா இலை ஹேர்பேக்
கொய்யா இலைகளில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. அவை முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன.
முடி உதிர்வு மற்றும் மெதுவான முடி வளர்ச்சி போன்ற முடி பிரச்சனைகளுக்கு பச்சை கொய்யா இலை ஹேர்பேக் ஒரு பிரபலமான இயற்கை தீர்வாகும்.
அதற்கு ஒரு கைப்பிடியளவு கொய்யா இலையை அரைத்து, அதனுடன் ஒரு முட்டை மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை தலை முடியில் நன்கு பூசி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி வர வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் நன்கு வலுப்பெற்று முடி உதிர்வதும் தடுக்கப்படும். மேலும் முடியானது அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.