கொய்யா பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதன் இலைகளும் நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன.
கொய்யா இலைகள் இயற்கையான மற்றும் பாதுகாப்பான முறையில் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு சிறந்த வழியாகும்.
கொய்யா இலை நன்மைகள்:
கொய்யா இலைகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கொய்யா இலைகளின் குளிர்ச்சியான தன்மை சரும வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
கொய்யா இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலை தடுக்கவும் பயன்படுகிறது.
கொய்யா இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. இது சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் பொடுகு பிரச்சனை நீங்கி முடி உதிர்தல் தடுக்கப்படும்.
கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும செல்கள் சேதமடைவதை தடுக்க உதவுகின்றன. இவை வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.