ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இருப்பினும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஆதார்-பான் எண்ணை இணைக்க கட்டணம் கட்ட வேண்டும்
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இவ்வாண்டு மார்ச் 29 அன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆதார் - பான் இணைப்பு 2022ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால், உங்களிடமிருந்து ரூ. 500 வசூலிக்கப்படும். ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு பான்-ஆதார் இணைத்தால் இரு மடங்கு அதாவது ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும்
வரி செலுத்துவோர் மேலும் வரி செலுத்துவோர் சிரமத்தைத் தணிக்கும் வகையில் இந்த ஆண்டு மார்ச் 29 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, வரி செலுத்துவோர் தங்கள் ஆதார் பான் எண்களை இணைக்க 2023ம் ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், வரி செலுத்துவோர் இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் மூன்று மாதங்கள் வரை ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்குப் பிறகு ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2023, மார்ச் 31 வரை, தங்கள் ஆதாரை தெரிவிக்காத மதிப்பீட்டாளர்களின் பான், வருமானம் திரும்பப் பெறுதல், பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற சட்டத்தின் கீழ் உள்ள நடவடிக்கைகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆதார் - பான் எண்களை இணைக்காதவர்கள் உடனடியாக ரூ.500 செலுத்தி இணைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. இனி ஆதார் - பான் எண்களை இணைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.