NATIONAL MISSION ON EDIBLE OILS *(தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்)*
*இது மத்திய அரசு நிதியின் மானிய உதவி திட்டம்"*
எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் மானியம் அறிவிப்பு!
உள்நாட்டில்
பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் எண்ணெய் பனை சாகுபடிக்குத் தேவையான பாசன வசதியினை உருவாக்கவும், கன்றுகளைப் பயிரிட்டுப் பாதுகாப்பதற்கும் 3 லட்சம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தினை வழங்குவதற்கு
*தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ்*
தமிழ்நாட்டிற்கு 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, பயன் பெறுமாறு வேளாண்மைத் துறை சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.