ஜன் தன் யோஜனா" வங்கி சேவை திட்டம் தொடக்கம் PMJDY 2014
திட்டம் குறித்து
இதுவரை வங்கி கணக்கு இல்லாதவர்கள் 10 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதை இத்திட்டத்தின் இலக்காகும்.
இந்தியாவில் இதுவரை 46.25 கோடி மக்கள் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு ஆரம்பித்துள்ளனர்.
திட்டத்தின் நோக்கம்
● வங்கி பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும்,
● மத்திய மாநில அரசுகளின் வழங்கும் சலுகைகளை பெறுவதற்காகவும்,
● சேமிப்பு, காப்பீடு, வங்கி கடன் போன்ற சேவைகளை பயன்படுத்துவதற்காகவும்.
● அனைவருக்கும் வங்கி சேவை முழுமையாக சென்று சேர்வதற்காகவும்.
திட்டத்தின் சிறப்பம்சம்
● 10 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள வங்கிகளில் ஜன்தன் வங்கி கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
● தகுதி பெற்ற வங்கி கணக்காளர்களுக்கு ரூ. 10,000 பரிவர்த்தனை அடிப்படையில் கடனாக வழங்கப்படும்.
● இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும் என்பது நிபந்தனை இல்லை.
● ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர் ஒருவேளை இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ. 30,000 அவர் அவரால் நியமிக்கப்பட்ட Nominee க்கு சென்று சேரும். ( 45 Days Activation Important )
● ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர் விபத்தில் இறந்து விட்டால் ரூ. 2 லட்சம் அவரால் நியமிக்கப்பட்ட Nominee க்கு சென்று சேரும். ( 45 Days Activation Important)
● Rupay கார்டு வசதியை மறக்காமல் பெற்றுக் கொள்ளவும்., அதனை பயன்படுத்திக் கொண்டே இருக்கவும்.
● காசோலை வசதியும் உண்டு.
ஜன்தன் கணக்கு ஆரம்பிப்பதற்கான தேவையான
ஆதார் கார்டு,
பான் கார்டு,
இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
வங்கி கணக்கு இல்லாத மக்கள் அருகில் உள்ள வங்கிக்கு சென்று, ஜன்தன் வங்கி கணக்கு உருவாக்கிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு தெரியபடுத்தவும்
இது போன்ற தகவல்களுக்கு கூகிள் நியூஸில் ஃபாலோ செய்யவும்