அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்* ( PMSYM ) *Rs. 3,000 மாத ஓய்வூதியம்*
*திட்டத்தின் நோக்கம்:*
அமைப்பு சாரா தொழிலாளர்கள் முதுமை வயதில் பயனடைவதற்காக.
*யார் யார் அமைப்பு சாரா தொழிலாளர்கள்*
செய்யும் தொழில், பணி அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்,
உடலுழைப்புத் தொழிலாளர்கள்,
ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தையல், கைவினைஞர், பனை மரத் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், கைத்தறி நெசவாளர், விசைத்தறி, மண்பாண்டத் தொழிலாளர், சமையல், சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள் நலம் என 17 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள்.
*திட்டம் குறித்து*
● 18 வயது முதல் 40 வயது உள்ள அனைத்து
அமைப்புசாரா தொழிலாளர்கள்
தங்களது முதுமை காலத்தில் பொருளாதார ரீதியாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது.
● ரூ. 55 முதல் ரூ. 200 வரை அவரவர் வயதிற்கு ஏற்ப மாத சந்தாவாக 18 முதல் 60 வயது வரை செலுத்த வேண்டும்.
● இதில் செலுத்தும் தொகையில், அதே நிகரான தொகை மத்திய அரசால் செலுத்தப்படுகிறது. ( உதாரணமாக ஒருவர் மாத சந்தா 150 ரூபாய் செலுத்துகிறார் என்றால், அதே 150 ரூபாய் மத்திய அரசால் செலுத்தப்படும் ).
● பயனாளி 60 வயதை கடந்த பிறகு இந்த திட்டத்தை ஆரம்பித்தவருக்கு ரூ. 3000 வீதம் மாதம் ஓய்வூதியமாக கிடைக்கப்பெறும்.
● ஒருவேளை சந்தாதாரர்க்கு இறப்பு ஏற்பட்டால் அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு ரூ. 1500 வீதம் ஓய்வூதியமாக மாதம் வழங்கப்படும்.
● ஒரு வேலை இருவருக்கும் இறப்பு ஏற்பட்டால் சந்தாதாரர் செலுத்திய மொத்த தொகையும் வட்டியுடன் சேர்த்து அவர்களால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர்க்கு சென்று சேரும்.
● 60 வயதுக்கு மேல் ஒருவேளை ஓய்வூதியம் தேவைப்படாமல் இருந்தால், விண்ணப்பம் எழுதிக் கொடுத்து சந்தாதாரர் செலுத்திய மொத்த தொகையும் வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம்.
*திட்டத்திற்கான தகுதிகள்*
● திட்டத்தை எடுப்பவர்கள் அமைப்பு சாரா தொழிலாளராக
இருக்க வேண்டும்.
● மாத வருமானம் ரூ. 15,000 க்குள் இருக்க வேண்டும்.
● 18 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.
● ஆண் பெண் இருபாலரும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
● இத்திட்டத்தை எடுப்பதற்கு ஏதேனும் ஒரு வங்கியில் ( Bank ) கணக்கு அல்லது அஞ்சல் கணக்கு ( Post Office Account ) பராமரிக்க வேண்டும்.
● அரசு அதிகாரிகள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ESI, PF உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர இயலாது.
*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்*
○ ஆதார் கார்டு
○ பான் கார்டு
○ வங்கி கணக்கு எண்
○ புகைப்படம்
*திட்டம் எடுப்பதற்கான முறை*
அருகில் உள்ள பொது சேவை ( E Sevai Center ) மையத்திற்கு சென்றோ அல்லது www.maandhan.in/shramyogi என்று இனணயதளத்தின் மூலமாகவும் இத்திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு