பாரத பிரதமரின் மத்திய ஊரக வளர்ச்சி சுய வேலைவாய்ப்பு திட்டம்
திட்டத்தின் நோக்கம் கிராமப்புறங்களில் வாழும் பின்தங்கிய மக்களுக்கு உரிய சுய தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அரசு சான்றிதழ் வழங்கி, வங்கியில் தொழிற் கடன் பெற்று தந்து, அரசாங்கம் வழங்கக்கூடிய மானியத்தை பெற்று தந்து சுய தொழில் அதிபர்களாக உருவாக்குவது.
திட்டத்திற்கான தகுதிகள்
● கிராமப்புறத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
● குறைந்தபட்சம் கல்வி தகுதி 8 வது தேர்ச்சி.
● பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
● 18 வயது முதல் 45 வயது.
குறிப்பு:
● பயிற்சி காலம் 10 நாட்கள் முதல் 30 நாட்கள்.
● நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
● பயிற்சியின் போது தேநீர் மற்றும் மதிய உணவு இலவசம்.
● ஒருவருக்கு ஒரு பயிற்சி மட்டுமே.
பயிற்சி விபரங்கள்
● பெண்களுக்கான தையல் பயிற்சி
● ஆண்களுக்கான தையல் பயிற்சி
● பெண்களுக்கான எம்ராய்டரிங் பயிற்சி
● செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சி
● கணினி பயிற்சி
● பெண்களுக்கான அழகு கலை பயிற்சி
● இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சி
● கோழி வளர்ப்பு பயிற்சி
● ஆடு வளர்ப்பு பயிற்சி
● செம்மறி ஆடு வளர்ப்பு
● துரித உணவு தயாரித்தல் பயிற்சி
● மீன் வளர்ப்பு பயிற்சி
● அலைபேசி பழுது மற்றும் சரிபார்த்தல் பயிற்சி
● வெல்டிங் மற்றும் ஃபேப்ரிகேஷன் பயிற்சி
● போட்டோஷாப் லேமினேஷன் பயிற்சி
● வீடுகளுக்கான எலக்ட்ரீசியன் பயிற்சி
● மருத்துவ நறுமண தாவரங்கள் வளர்ப்பு பயிற்சி
● தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
● மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
● தச்சு வேலை பயிற்சி
● பாதுகாப்பு அலாரம் குகை உணர்வு சாதனங்கள் பொருந்துதல் மற்றும் சர்வீஸ் பயிற்சி
மற்றும் பல பயிற்சிகள் தேவைக்கு ஏற்ப.
தேவையான ஆவணங்கள்
ஆதார் எண், ரேஷன் கார்டு, புகைப்படம்
திட்டம் பெறும் முறை விருப்பமுள்ளவர்கள் அவரவர் மாவட்டத்தில் அமைந்துள்ள RSETI ( ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ) "முன்னோடி வங்கி" அவர்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தினை பெற்றுக் கொள்ளலாம்.