👉அத்தி பழத்தை சாப்பிடுவது எப்படி?
ஒரு தம்ளர் நீரில் உலர் அத்திப்பழம் மூன்றைப் போட்டு மறுநாள் காலையில் அத்திப்பழத்தை மென்று சாப்பிடலாம். லேசான இனிப்புச்சுவை கொண்டாலும் மெல்லும் போது ரவை போன்ற விதைகள் வாயில் படுவதாலும் குழந்தைகள் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்
👉அத்திப்பழம் யார் சாப்பிட கூடாது?
அத்திப்பழத்தை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு இயற்கையாகவே ஒவ்வாமை ஒவ்வாமை ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அத்திப்பழத்தை கண்டிப்பாக எடுக்க கூடாது
👉 அத்தி பழம் மரம் எப்படி இருக்கும்?
அத்தி, அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம், சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும்.
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது.
இழக்க உதவுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.
அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தனியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.
அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.