ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் மாதா மாதம் NPS திட்டம் , முழு விவரம் இதோ

  பணி ஓய்வு பெறும் நபர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மிகச்சிறந்த தேர்வாக உள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் அனைத்து அரசு அல்லது தனியார் ஊழியர்களும் முதலீடு செய்யலாம். பணி ஓய்வுக்குப் பிறகும் வாழ்க்கைக் கவலைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வழிவகை செய்யும். 


இதற்காக பலரும் பல வித பெரிய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். நன்றாக யோசித்து முதலீடு செய்கிறார்கள், நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். ஏனெனில், ஓய்வுக்குப் பிறகு, மக்களுக்குச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது. 

உடல்நலக் குறைவு, மூப்பு போன்ற காரணங்களால் பல நோய்களுக்கான ஆபத்து வயதான காலத்தில் அதிகமாகும். இந்த நிலையில், மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் ஓய்வூதியப் பலன் கிடைக்கும் ஒரு திட்டம் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒரு திட்டத்தை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம் .

இதையும் படியுங்கள் :

வரம்பை மீறினால் வருமான வரி நோட்டீஸ் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்?

ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் வாழ  விரும்பினால், இப்போதிருந்தே அதற்காக திட்டமிட வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை . ஓய்வுகாலத்தில் நல்லவிதமான செலவுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் செலவுகளைச் சந்திக்க, நம்மிடம்  மாத வருமான ஆதாரம் இருக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) சிறந்த வழியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் உதவியுடன், முதுமைகாலத்தை மகிழ்ச்சியான முறையில் செலவழிக்க  போதுமான நிதியை இந்த திட்டத்தால் திரட்ட முடியும்.


மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி?

ஓய்வு காலத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியமாக பெறுவது ஒருவரது இலக்கு என்று வைத்துக்கொள்ளலாம் . அந்த இலக்கை அடைய அந்த நபர் என்பிஎஸ் -இல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை பாக்கலாம் வாங்க . உதாரணமாக 25 வயதுள்ள ஒரு நபர் இதற்கு திட்டத்தில் இணைகிறார் என்றால், அவருக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கால அவகாசம் 35 ஆண்டுகள் கிடைக்கும். இந்தக் கணக்கீட்டிற்கு SBI பென்ஷன் ஃபண்டின் NPS கால்குலேட்டரைப் பயன்படுத்தபடுகிறது .

👉 NPS இல் மாதாந்திர முதலீடு : ரூ 12,000
👉 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ 45 லட்சம்
👉 மதிப்பிடப்பட்ட வருமானம்: 10 சதவீதம்
👉 முதிர்வுக்கான மொத்தத் தொகை: ரூ 4.5 கோடி
👉 தொகை: 45% (ரூ 2.0 கோடி)
👉 மதிப்பிடப்பட்ட விகிதம்: 6 சதவீதம்
👉 60 வயதில் ஓய்வூதியம்: மாதம் ரூ.1.07 லட்சம்

இதையும் படியுங்கள் : 

UPI கணக்குகள் முடக்கப்படும்.


NPS இல் ஆண்டுத் தொகை என்றால் என்ன?

ஒருவர் NPS இல் முதலீடு செய்தால், அவர் 40 சதவீத தொகையை எடுக்க வேண்டும். ஆண்டுத் தொகையில் இருந்துதான் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவீர்கள். இங்கு செய்யப்பட்ட கணக்கீட்டில், 45 சதவீதம் ஆண்டுத் தொகை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விகிதம் 6 சதவீதம் ஆகும். அதாவது ஓய்வூதிய நிதியில் 45 சதவீதம் ஆண்டுத் தொகைக்கு செல்லும்.

ஒருவரது ஆனுவிட்டி அதிகமாக அவரது ஓய்வூதியமும் அதிகமாகும். என்பிஎஸ்-ல் 40 சதவீதம் ஆண்டுத் தொகையை எடுக்க வேண்டியது அவசியம். NPS இல் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ் ரூ. 50,000 வரையிலான வரி விலக்கு நன்மையையும் வழங்குகிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக எழுதப்பட்டது.

முதலீடு செய்வதற்கு முன், நிச்சயமாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு நமது குமரி தொழா வலை பகுதியினை பின் தொடரவும் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.