பால் மணக்குது … பழம் மணக்குது … பழனி மலையிலே
பால் மணக்குது … பழம் மணக்குது … பழனி மலையிலே
பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே … அப்பப்பா
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே
தேன் இருக்குது … தினை இருக்குது … தென் பழனியிலே
முருகா, முருகா, முருகா, முருகா
தேன் இருக்குது … தினை இருக்குது … தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
வேலனுக்கு … அரோகரா
முருகனுக்கு … அரோகரா
கந்தனுக்கு … அரோகரா
அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி
அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி
வேல் இருக்குது … மயில் இருக்குது … விராலிமலையிலே
வேல் இருக்குது … மயில் இருக்குது … விராலிமலையிலே
அந்த விராலிமலையிலே
மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
விராலி மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே.