முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் & Central Govt*. ( ரூ. 5,00,000 இலவச ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் )

*திட்டத்தின் நோக்கம்*
• மக்கள் அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.
• இதன் மூலம் வருமானம் குறைந்த குடும்பங்கள் உலக தரம் வாய்ந்த சிகிச்சைகளை கட்டணமில்லாமல் பெற முடியும்.
• இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் அதிகபட்சமாக
Rs. 5,00,000 வரையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
• இந்த திட்டத்தில் 1090 சிகிச்சை முறைகளும், 08 தொடர் சிகிச்சை முறைகளும் மற்றும் 52 பரிசோசதனைகளும் கண்டுபிடிப்புகளும் உள்ளன.
• இதில் பச்சிளங்குழந்தைளுக்கான சிகிச்சை முறைகளும் அடங்கும்.
• அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள்*:
எடை குறைப்பு அறுவை சிகிச்சை,  இருதய நோய் சிகிச்சை, இருதய நோய் அறுவை சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, நோய் கண்டறிதல் மையம், காது மூக்கு தொண்டை சிகிச்சை, அவசர சிகிச்சைகள், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, உட்சுரப்பி சிகிச்சை, பின் தொடர் செயல்முறை, இரைப்பை குடல் சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, இருபாலார் சிறுநீரக நோய் சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் சிகிச்சை, இரத்தவகை சிகிச்சை, கல்லீரல் நோய் சிகிச்சை சிகிச்சை, தொற்று நோய் சிகிச்சை, இடையீடு இருதயவியல் சிகிச்சை, இடையீடு இருதய சிகிச்சை, புற்றுநோய் மருத்துவ சிகிச்சை, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, வாய் வழி மற்றும் தாடை அறுவை சிகிச்சை, கண் நோய் அறுவை சிகிச்சை, எலும்பியல் காயம் சிகிச்சை, இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை, குழந்தை அறுவை சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, மனநல மருத்துவ சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை,  முடக்கு வாதம் சிகிச்சை, தண்டுவடம் சிகிச்சை, இருதய நோய் / மாரடைப்பு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, நெஞ்சக நோய் சிகிச்சை மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சைகள்.

பின்வரும் படிகளை பின்பற்றி Health Insurance Card யை Download செய்யலாம். ( முன்பு காப்பீட் எடுத்திருந்தால்)

Step 1: முதலில் www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Enrollment என்பதற்கு கீழே உள்ள Member Search / e-Card  என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: உங்களின் Health Insurance Card இல் உள்ள URN Number அல்லது Ration Card Number இவை இரண்டில் ஏதாவது ஒன்றை Enter செய்யவும்.

Ration Card Number ( பழைய ரேசன் கார்டு ) என்பது 20G1234568 என்ற வடிவில் இருக்கும்.
பிறகு Search என்ற பட்டனை அழுத்தவும்.

Step 4:  இப்பொழுது Policy Number இன் மீது கிளிக் செய்யவும்.

Step 5: தற்போது Beneficiary Details தெரிவதை காண்பீர்கள். பிறகு Generate e-card என்பதை அழுத்தவும்.

Step 6: இப்பொழுது Health Insurance Card தெரியும். அதை Download செய்து, பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

*திட்டத்திற்கான தகுதிகள்* - "புதியதாக எடுப்பதற்கு"
● ஆண்டு வருமானம் ரூ.1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
● குடும்ப உறுப்பினர் அனைவரும் பெயரும் ரேஷன் கார்டுக்குள் இருக்க வேண்டும்.
● இலங்கைய அகதிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்

*குறிப்பு*
திட்டத்தை புதிதாக எடுக்க விரும்பினால் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர், ரேஷன் கடையும், குடும்ப புகைப்படத்தையும் அவரவர் மாவட்டத்தில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகத்தில் எடுத்துச் சென்று, அங்குள்ள காப்பீட்டு துறையில் விண்ணப்பத்தை பெற்று கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதே விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு துறையில் கொடுத்தால் புதியதாக 5 லட்சத்துக்கு உண்டான மருத்துவ காப்பீடு திட்டம் எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு: எந்தெந்த வகையான நோய்களுக்கு எந்தெந்த மருத்துவமனையை சிகிச்சை அளிக்கப்படுகிறது மற்றும் வேறு ஏதேனும் சிகிச்சை குறித்த தகவலுக்கும் இலவச டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைக்கவும்.

Toll Free Number: 18004253993

இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.