வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம்

*வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சம் வரை மானியம்.* வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம் சிறு, குறு விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில் 

*வேளாண் இயந்திர வாடகை மையம்* ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு, 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில்,

 *தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும்* .


 *அதிகபட்சமாக கிடைக்கும் மானிய விபரங்கள்* :

👉டிராக்டருக்கு ரூ.5 இலட்சம், 

👉மினி டிராக்டருக்கு ரூ.2.25 இலட்சம்,

👉பவர்டில்லருக்கு ரூ.85,000/-,

 👉நெல் நடவு இயந்திரத்திற்கு ரூ.5 இலட்சம்,

👉களையெடுக்கும் இயந்திரத்திற்கு ரூ.63,000/-

👉சுழல் கலப்பைக்கு ரூ.44,800/-,
 
👉விதைப்புக் கருவிக்கு ரூ.24,100/-,

👉நிலக்கடலை அறுவடை இயந்திரத்திற்கு ரூ.75,000/-,

👉கொத்துக் கலப்பைக்கு ரூ.50,000/-,

👉நெல் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.11 இலட்சம்.

👉பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரத்திற்கு ரூ.2.50 இலட்சம்,

👉கரும்பு சோகையை துகளாக்கும் கருவிக்கு ரூ.1.25 இலட்சம்,

 👉தென்னை ஓலைகளை துகளாக்கும் கருவிக்கு ரூ.63,000/-,

👉வைக்கோல் கட்டும் கருவிக்கு ரூ.2.25 இலட்சம்,

👉கரும்பு சோகை உரிக்கும் கருவிக்கு ரூ.75,000/-,

👉புதர் அகற்றும் கருவிக்கு ரூ.30,000/-,

👉தட்டை வெட்டும் கருவிக்கு ரூ.20,000/- மானியமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnbjpkm.com/ 

இந்த பதிவினை மற்றவர்களுக்கு பகிரவும் 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.