*திட்டத்தின் நோக்கம்*
● அறுவடைக்குப் பிந்தைய வேளாண் கட்டமைப்புக்கும் உதவும்.
● தொடக்க வேளாண் கடன் சங்கம் (Primary Agricultural Credit Society- PACS), வேளாண் உற்பத்தி அமைப்புகள் (Farmer Producer Organisations - FPOs), வேளாண் தொழில்முனைவோர் (Agri-entrepreneurs) ஆகிய தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
● இந்த வசதிகளின் மூலம் விவசாயிகள் உற்பத்திப் பொருள்களை குளிர்சாதன சேமிப்பு மையங்களில் பாதுகாப்பாக வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
● உணவுப் பண்டங்கள் வீணாவதைக் பெரும்பகுதி குறைக்கும்.
● பதனீட்டை அதிகரிக்கும். கூடுதல் மதிப்பும் கிடைக்கும்.
*திட்டத்திற்கான பயனாளிகள்*
● விவசாயிகள்
● தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (PACS)
● சந்தைக் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies)
● வேளாண் உற்பத்தி அமைப்புகள் (FPOs),
● சுய உதவிக் குழுக்கள் (SHGs),
● தொழில் புதிதாகத் தொடங்குவோர் (Start ups),
● வேளாண் தொழில்முனைவோர் (Agri-entrepreneurs),
● அரசு சார் நிறுவனங்கள்
*திட்டத்தின் சிறப்பம்சம்*
● இத்திட்டம் 2020 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரையில் 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
● இதற்காக ரூ. 1 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
● இத்திட்டத்தில் 3% வட்டி மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
● கடன் உத்தரவாத நிதி சிறு, குறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி (Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises) திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி கடன்களுக்கான உத்தரவாதமும் அளிக்கப்படும்.
*திட்டம் பெரும் முறை* அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ( அல்லது ) www.agriinfra.dac.gov.in என்ற இணையதளம் மூலம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
நன்றி,
மற்றவர்களுக்கும் பகிருங்கள்