பிரதம மந்திரி தனிநபர் விபத்து காப்பீடு திட்டம் ( PMSBY )

*பிரதம மந்திரி தனிநபர் விபத்து காப்பீடு திட்டம் ( PMSBY )* 

காப்பீடு தொகை: ரூ. 2,00,000 & சந்தா ரூ. 20 ( வருடம் )

திட்டத்தின் குறிக்கோள்:

 01. ஏழை மக்களின் அடிப்படை பாதுகாப்புக்கானது. 
02. ஆபத்துக் காலத்தில் ஏற்படும் நிதி நிலையை சரி செய்வதற்காக.
03. காப்பீடு முக்கியத்துவம் குறித்து இத்திட்டத்தின் மூலம் அறிவார்கள்.

விபத்தினால் ஏற்படும் இறப்புக்கு ரூ. 2,00,000, முழு முழக்கம் ரூ. 2,00,000, பகுதி முடக்கம் ரூ. 1,00,000 


*திட்டம் எடுப்பதற்கான முறை*

 01. 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

02. ஆண் பெண் இருபாலரும் எடுத்துக் கொள்ளலாம் 

03. இத்திட்டத்தை திட்டத்தை எடுப்பதற்கு, நீங்கள் பராமரிப்பு செய்யும் வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சல் அலுவலகத்திலோ சென்று மேலாளரிடம் இதற்கு உண்டான படிவத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து அவர்களிடம் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பொழுது தகவல்கள் அனைத்தையும் சரியாக உள்ளதா என கவனித்துக் கொள்ளவும். 

ஒவ்வொரு வருடமும் மே 25 முதல் மே 31 வரை இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகை ரூபாய் 20 வங்கி கணக்கில் அல்லது அஞ்சல் அலுவலக கணக்கில் எடுக்கப்படும்.



நன்றி ! 
அனைவருக்கும் பகிருங்கள் !!
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.