ஆதார் கெடு.. டிசம்பர் 14 . 10 ஆண்டுகள் அப்டேட் கட்டாயம்.. ஆன்லைனில் அப்ளை பண்ணாம விட்ராதீங்க!

 10ஆண்டுகளுக்கும் மேல் ஆதார் கார்டை அப்டேட் (Aadhaar Card Update) செய்யாதவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி வரையில் இலவச ஆன்லைன் சேவையை கொடுக்கிறது.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் விவரங்களை ஆதார் கார்டு மூலமாக மத்திய அரசு கவனித்து வருகிறது. இப்போது ஆதாரத்துக்கான சமர்பிக்கும் பெரும்பாலான ஆவணங்களில் ஆதார் கார்டே முதல் வரிசையில் வந்துவிட்டது. 

 பேங்க் அக்கவுண்ட் தொடங்கி, கூகுள் பே வரையில் ஆதார் வெரிபிகேஷன் வந்துவிட்டது.
வருங்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கூட ஆதார் கார்டே முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனாலேயே குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கவும், 10 வருடங்களுக்கு மேலாக புதுப்பிக்காத ஆதார் கார்டுகளை புதுப்பிக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது


இதிலும் 10 வருடங்கள் அப்டேட் செய்யாமல் இருந்தால் கட்டாயம் செய்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

இதில் ஆதார் கார்டு பெயர் மாற்றுதல் (Aadhaar Card Name Change), ஆதார் மொபைல் நம்பர் மாற்றுதல் (Adhaar Card Mobile Number Change), ஆதார் கார்டு முகவரி மாற்றுதல் (Adhaar Card Address Change), ஆதார் கார்டு இமெயில் மாற்றுதல் (Aadhaar Card Email Change) உள்ளிட்டவை அடங்கும்.

இப்போது ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டுமானால், முகவரியை மட்டுமே மாற்ற முடிகிறது. மற்ற விவரங்களை மாற்ற வேண்டும் என்றால், ஆதார் சென்டரில் (Aadhar Center) மட்டுமே முடியும். ஆகவே, முகவரி விவரங்களை அப்டேட் செய்யாதவர்கள் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்


ஆதார் கார்டு முகவரி அப்டேட்: முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான யுஐடிஏஐ (UIDAI) பக்கத்துக்கு செல்ல வேண்டும். அப்போது, ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு விருப்ப மொழிகளின் டேப்கள் தோன்றும். அதில் உங்களது மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.இதையடுத்து, அப்டேட் ஆதார் (Update Aadhaar), கெட் ஆதார் (Get Aadhaar) மற்றும் ஆதார் சர்வீசஸ் (Aadhaar Services) என்னும் மூன்று டேப்களை பார்க்க முடியும். அதில் அப்டேட் ஆதார் டேபை கிளிக் செய்துகொள்ளுங்கள். ஒருவேளை ஆதார் டவுன்லோட் செய்ய வேண்டுமானால், கெட் ஆதார் டேப்பையும், மொபைல் வெரிபிகேஷன், இமெயில் வெரிபிகேஷன் போன்றவற்றுக்கு ஆதார் சர்வீசஸ் டேப்பையும் கிளிக் செய்துகொள்ளுங்கள் 

 

அப்டேட் ஆதார் டேப் குறித்து பார்ப்போம். 


அந்த டேபை கிளிக் செய்தவுடன் அப்டேட் யுவர் ஆதார் (Update Your Aadhaar) பக்கம் தோன்றும். இதற்கு கீழ் அட்ரஸ் வேலிடேஷன் ரிக்கொஸ்ட் (Address Validation Request), செக் ஆதார் அப்டேட் ஸ்டேடஸ் (Check Aadhaar Update Status), அப்டேட் அட்ரஸ் இன் யுவர் ஆதார் (Update Address in your Aadhaar) போன்ற டேப்கள் தோன்றும்.அதில் அப்டேட் அட்ரஸ் இன் யுவர் ஆதார் பக்கத்தை கிளிக் செய்யுங்கள். இப்போது, உங்களது ஆதார் எண்ணோடு கேப்ட்சா வெரிபிகேஷன் கேட்கப்படும். அதை கொடுத்தவிட்டால், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதையும் கொடுத்து உள்ளே செல்லுங்கள். இப்போது, நீங்கள் மாற்ற வேண்டிய முகவரியை மாற்றலாம்.

இது போன்ற ஆன்லைன் சேவைகள் குறித்த தகவல்களுக்கு நமது பக்கத்தை பின்தொடரும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.