UPI கணக்குகள் முடக்கப்படும். NPCI பிறப்பித்த உத்தரவு...

யுபிஐ பண பரிவர்த்தனைகள் செய்யும்  செயலிகளான Google Pay, PhonePe மற்றும் PayTM போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் சிலருக்கு UPI மூலம் பணம் செலுத்த முடியாமல் போகலாம். 

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதாவது (NPCI) வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகள் தொடர்பாக, ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாத கணக்குகளுக்கு UPI சேவையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிட்டதக்கது.

 அதாவது நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பரிவர்த்தனைகளுக்கு UPI ஐப் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் UPI கணக்கு முடக்கப்படும், மேலும் உங்களால் அதைப் பயன்படுத்த முடியாது. 

இது நடவடிக்கை 31 டிசம்பர் 2023 முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து பயன்படுத்தப்படும் UPI ஐடிகள் மட்டுமே செயலில் இருக்கும். UPI ஐடியைப் பயன்படுத்துவதும் செயலில் உள்ள கணக்குகளை முன்னெடுத்துச் செல்வதும், ,பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என NPCI தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கை UPI பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நம்புவதாக NPCI கூறியுள்ளது. இது தவிர, பல தவறான பரிவர்த்தனைகள் நிறுத்தப்படலாம். NPCI வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அனைத்து செயலிகளும் வங்கிகளும் இனிமேல் UPI ஐடி மற்றும் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வைத்து செயலற்ற வாடிக்கையாளர்களின் தரவுகளை சரிபார்க்கும். ஒரு வருடத்தில் கிரெடிட் அல்லது டெபிட் இல்லை என்றால் UPI ஐடி மூடப்படும்.



NPCI தவறான பரிவர்த்தனைகள் குறித்து பல புகார்களைப் பெற்றுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அடிக்கடி தங்கள் மொபைல் எண்ணை மாற்றுகிறார்கள். ஆனால் அதனுடன் வரும் UPI ஐடியை புதுப்பிக்க மறந்துவிடுகிறார்கள். இது இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்த எண் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது நிலையில் UPI இன்னும் செயலில் இருக்கும் போது, பணம் பரிவர்த்தனை குறித்த விபரங்கள், அந்த சமயத்தில் அந்த தொலைபேசி எண்ணை வைத்திருப்பவருக்கு தான் செல்லும். இது போன்ற குழப்பங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை உண்டாக்கலாம். இதுபோன்ற பல வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் NPCI இப்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.