பான் கார்டு18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக வருமான வரி, வங்கி கணக்கு சேவை உள்ளிட்ட தேவைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
18 வயது நிறைவடைந்தவர்கள் பான் கார்டு பெறலாம். அண்மையில் மத்திய அரசு பான் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பை கட்டாயமாக்கியது. இந்நிலையில், பான் அட்டையில் பெயர், போன் நம்பர், உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், ஆன்லைனில் எளிதாக செய்யலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இந்த திருத்தங்களை செய்யலாம்.
1. மத்திய அரசின் NSDL என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவும். அங்கு 'விண்ணப்ப வகை' மெனுவில் இருக்கும் பான் தரவுகளில் மாற்றங்கள் அல்லது திருத்தம்' என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
2. அதேசமயம் மத்திய அரசின் மற்றொரு இணையதளமான UTIITSL-ல் ஹோம் பக்கத்தில் உள்ள ‘பான் கார்டில் மாற்றம்/ திருத்தம்’ ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்து ‘பான் கார்டு விவரங்களில் மாற்றம்/ திருத்தம் செய்ய விண்ணப்பிக்கவும்’ என்பதைக் குறிப்பிடவும்.
3. அடுத்து ‘டிஜிட்டல்’ ஆப்ஷன் கிளிக் செய்யவும். இதற்கு ஆதார் கார்டு இணைக்கப்பட்ட மொபைல் எண் வைத்திருக்க வேண்டும்.
பான் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக வருமான வரி, வங்கி கணக்கு சேவை உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தவர்கள் பான் கார்டு பெறலாம். அண்மையில் மத்திய அரசு பான் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பை கட்டாயமாக்கியது. இந்நிலையில், பான் அட்டையில் பெயர், பொன் நம்பர், உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், ஆன்லைனில் எளிதாக செய்யலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இந்த திருத்தங்களை செய்யலாம்.
4. இப்போது தேவையான விவரங்களை நிரப்பி, என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவிடவும்.
5. இதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படும். சேவை கட்டணம் சபசெலுத்தி விவரங்களை சரிபார்த்து கொடுத்தால் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது. புதிய பான் அட்டை அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.