கதை சொல்லட்டுமா தேழா

 ஒரு ஊர்ல ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை இருந்தது அந்த தொழிற்சாலையில்  எல்லா செயல்பாட்டிலும் அனுபவம் மிக்க ஒருவர் அங்கு வேலை பாத்துட்டு இருந்தாரு அவரு அங்க புதுசா வேலைக்கு சேர்பவர்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர் அப்ப ஒரு நாள் ஒரு இளைஞன் அவருக்கு கீழே வேலைக்கு சேர்ந்தார் அந்த இளைஜன்  ரொம்ப துடிப்பான வனாகவும் திறமைசாலியாகவும் இருக்கறதால அவன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அந்த பெரியவர்  2 அறிவுரைகள் சொல்றாரு முதலாவது யார்கிட்டயும் அதிகம் பேசாத அதிகப் பேச்சு வேலையில உன் கவனத்தை சிதறடிக்கும் இரண்டாவது உன் திறமையை எப்போதும் வளத்துகிட்டே இருக்கணும்  இந்த தொழிற்சாலையில் இருக்கிற எல்லா வேலைகளையும் கற்றுக் கொள். என்னைக்குமே இது தான் என் வேலை இதை மட்டும்தான் நான் செய்வேன் ஒரு எல்லைக்குள்ளேயே நிக்காதேனு சொன்னார்  அந்த இளைஞனும் அவருடைய அறிவுரைப்படியே தான் வேலை செஞ்சுட்டு வருகிறான்  இப்படியே நாட்கள் ஓட ஒரு பத்து வருடங்கள் கழித்து இந்தப் பெரியவர் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார் .  எல்லாரும் அவரை வாழ்த்தி அவருடைய சிறப்பான பணிக்குப் பாராட்டுவிழா நடத்தி வழி அனுப்பினர் .  அவர் போனதுக்கப்புறம் அந்த இளைஞனும் தன் கடும் உழைப்பால் ஒரு கைதேர்ந்த வல்லுனராக மாறினார் . இப்படியே போய்ட்டிருக்க ஒருநாள் தன் வழிகாட்டியும் ஆசனம் ஆகிய அந்த பெரியவரை சந்திக்க போனார் . அப்போ தான் வேலைக்கு சேரும்போது இருந்த உற்சாகமும் சந்தோஷமும் இப்ப அந்த இளைஞன் கிட்ட  இல்லை பெரியவர் அதற்கான காரணம் என்ன என்று கேட்கிறார் அதற்கு அந்த இளைஞன் சொன்னான்

ஐயா நான் நீங்க சொன்னது போலவே என் வேலையை அர்ப்பணிப்போடும் விடாமுயற்சியுடன் செஞ்சிட்டு வந்தேன் நான் சோர்வடைய மாதிரி தளர்ந்து போற மாதிரி எத்தனையோ சம்பவங்கள் நடந்து இருக்கு ஆனா நான் அதை எதையும் மனதில் வைக்காமல் என் வேலையில் முழு கவனத்தை செலுத்தி அந்த தொழிற்சாலையில் இருக்கிற எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டேன்.  எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்ல நான் எவ்வளவுதான் உழைத்தாலும் என்ன விட அனுபவத்தில் குறைவான தகுதி இல்லாதவங்க எல்லாம் மேலிடத்துக்கு ஜால்ரா போட்டு பதவி உயர்வு வாங்கிட்டு போயிடுறாங்க ஆனா யாரு கூடயும் தேவையில்லாம பேச்சு வைத்திருக்காமல் என் வேலையை மட்டுமே  செய்கிறேன் நான் இன்னும் அதையே சம்பளத்துல அதே பதவியில் தான் இருக்கேன் அப்படின்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான் . 

அந்த பெரியவர் அவன் கிட்ட நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு உன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்லு உன்னுடைய பணிகள் மூலமா அந்த தொழிற்சாலைக்கு நீ இன்றியமையாதவனாக அதாவது மிக முக்கியமான நபராக மாறி விட்டதா நினைக்கிறாயா எனக் கேட்கிறார் 

அதற்கு அந்த இளைஞனும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஆம்  சொல்றான் கொஞ்ச நேரம் யோசனையில் இருந்த அந்த பெரியவர் சரி அப்படின்னா நீ ஒன்று செய்  ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஒரு நாள் விடுப்பு கேளு.

 நீயும் ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிற  அதனால உனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை அப்படின்னு சொல்றாரு அந்த இளைஞனுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு என்னடா நமக்கு பதவி உயர்வு கிடைக்கல  என்று சொன்னால் இவர்கள் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடு என்று சொல்கிறாரே சரி அதையும்தான் செய்வோம் .

என்ன நினைச்சுட்டு அடுத்து அவரை ஏதோ ஒன்னு சொல்ல அது என்னனூ  கூட கவனிக்காமல்  அந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான் . 

ஒரு நாள் விடுப்பு எடுதான் அப்புறம் அவன் வேலை போகும் போது அவனுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்து இருந்தது அவருடைய மேலதிகாரி அவனுக்கு கூப்பிட்டு நேத்து நீங்க இல்லாமல் ரொம்ப சிரமமா போச்சு அந்த தெற்க்கு மூலையில் இருக்கிற மெஷின் திடீரென பழுதானது அதனால்  வேலைகள் எல்லாம் சரிவர நடக்கவில்லை நீங்கள் இருந்திருந்தால் அது ரொம்ப சுலபமா சரி பண்ணி இருப்பீங்க ஆனா மத்தவங்களுக்கு அதை பத்தி எதுவுமே தெரியல  இப்பதான்  உங்களுடைய முக்கியத்துவம் என்னனு புரியுது என்று சொல்லி அவரை ஊக்குவிகத்து அவருடைய பணிகளை மேலும் சிறப்பாக செய்யணும்னு அவருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் தர அந்த இளைஞனுக்கு ரொம்ப குஷி ஆயிடுச்சு 

ஆஹா நம்ம குருநாதருக்கு என்ன ஒரு அறிவு நம்ம வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கு இதுதான் சரியான வழி.

எப்ப எல்லாம் தான் செய்யும் வேலைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கலனு நினைக்கிறானோ அப்ப எல்லாம் விடுமுறை எடுக்க ஆரம்பிச்சான் அடுத்த நாளே அவன் எதிர்பார்த்த சன்மானம் கிடைத்தது 

இது நல்லாயிருக்கே இதையே பல மாதங்களாக செஞ்சுட்டு வந்தார் ஆனால் ஒரு நாள் அவன் எதிர்பாராத விதமாக நடந்தது எப்பவும் போல ஒரு நாளைக்கு போகும் போது வாசலில் இருந்த காவலாளி நீ இனிமே உள்ளே போகக்கூடாது உன்னை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க 

 நம்பவே முடியல அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம தன்னுடைய குரு அந்த ரிட்டையர் ஆன பெரியவர் இருக்கார்  இல்லையா அவர பாக்க போனார்

 அவர்கிட்ட போயி இந்த தடவையும் நான் நீங்க சொன்ன மாதிரியே தான் பண்ணினேன் அப்படி இருக்கும்போது எனக்கு ஏன் வேலை போச்சு அந்த அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேனு அப்படின்னு கேட்கிறார் அதற்கு அந்த பெரியவர் .இளைஞனுக்கு கூறிய பதில் அதிர்ச்சியா இருந்தது ஆமாம் நான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் தான் நீ கேட்ட இரண்டாவது விஷயத்தை நான் சொல்றதுக்கு முன்னாடியே நீ கிளம்பி போயிட்டே ஒரு பல்பு எரியும் வரைக்கும் நாம அதை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டோம் ஆனால் அதே பல்பு திடீர்னு ஆஃப் ஆகி இருட்டில் இருக்கும் போதுதான் நமக்கு அதனுடைய முக்கியத்துவம் தெரியும்.
அது போல தான் உன்னுடைய மதிப்பு என்னென்ன  அவர்களுக்கு புரிய வைப்பதற்காக உன்னை விடுப்பு எடுக்க சொன்னேன் 
இதை புரிஞ்சுகிட்டே நீ அதை உடனே செயல்படுத்தி பாக்கணும்னு அவசரப்பட்டு அடுத்து நான் என்ன சொல்ல வரேன்னு கேட்காமல் போய் விட்டே நான் சொல்லவந்தது இரண்டாவது விஷயம் 

முதல் விஷயத்தை விட மிக முக்கியமானது அந்த பெரியவர் ரொம்ப பொறுமையா சொன்னாரு நம்மகிட்ட இருக்கிற பல்பு அடிக்கடி எரியாமல் பழுதான என்ன பண்ணுவோம் அதை திரும்பத் திரும்ப சரி பண்ணி நம்ம நேரத்தை வீணடிக்காம  போவோமா இல்ல அந்த இடத்துல வேற ஒரு நல்ல பல்பு வாங்கி மாட்டுவோமா  அந்த இளைஞனைப் பார்த்த அந்தப் பெரியவர் கேட்கும் போதுதான் அவனுக்கு தான் செய்த மிகப்பெரிய தவறு என்ன புரிஞ்சது  ஒரு விஷயத்தை எதற்கு செய்கிறோம் ஏன் செய்கிறோம் யோசிக்கல அந்த செயலை செய்யும் போது அதனுடைய விளைவுகள் நல்ல தான் இருக்கு மா மோசமாக இருக்குமா ஆனா  இருங்க கதை முடிஞ்சுது நான் ஏதோ கருத்து சொல்ல போறேன்னு நினைத்து நீங்களும் அந்த இளைஞன் மாதி பாதியில் போயிடாதீங்க நான் சொல்ல வர விஷயமே இனிமேல் தான் வருது இந்தக் கதையையே நம் வள்ளுவர்  பாணியில் சொல்லனும்னா 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் 

குறள் 461  என்ற அதிகாரத்தில் வரை இந்த குரள்ளுடைய அர்த்தம் ஒரு செயலை நாம் செய்யறதால அறிவதும் வரக்கூடிய கெடுதலையும் அதுவும் அந்த செயலால் வரக்கூடிய நன்மையையும் வழிபயக்கும் ஊதியமும் அந்த செயலாளர் நன்மை நடக்கும் தீமை நடக்குதோ அதன் விளைவாக நமக்கு கிடைக்கக்கூடிய பலனையும் சூழ்ந்து செயல் ஆராய்ந்து செய்ய வேண்டும் சுருக்கமா சொல்லணும்னா எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தன் கவுத்தன் செய்யாமல் அதுல இருக்கிற நல்லது கெட்டது எல்லாத்தையும் யோசிச்சு பாருங்க அப்படின்னு வள்ளுவப் பெருந்தகை சொல்றாரு நாம எல்லாருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்தித்திருப்போம் ஒரு விஷயத்தை அவசரப்பட்ட செஞ்சுட்டேன் அதுக்கப்புறம் யோசிச்சு சொன்ன வார்த்தை போடறதுக்கு பதிலா அதனுடைய விளைவுகள் நல்லா யோசித்து அப்புறம் செயலில் இறங்கவும் இனி நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும்போது அது சின்னதா இருந்தாலும் சரி பெருசா இருந்தாலும் சரி இந்த கதை ஞாபகத்துக்கு வருரனும் 

 கதை சொல்லும் இது போன்ற பதிவுகளை தொடரலாமா உங்களுடைய கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் போடுங்க இந்த கதைக்குள்ளேயே இன்னொரு கருத்து ஒழழிச்சிருக்கு அது என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சா அதையும் கமெண்ட் பண்ணுங்க அடுத்த பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.